விடைபெற்றார் மன்மோகன் சிங்….21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!
டெல்லியில் உள்ள நிகம்போத் காட்டில், முப்படைகளின் மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி இரவு காலமானார். இதையடுத்து, அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்று வருகிறது. மேலும், அவரது உடல் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து நிகாம் போக் காட் வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
அங்கு, மன்மோகன் சிங் உடல் மீது தேசியக்கொடி போர்த்தி, முப்படை மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, அவரது உடலுக்குசோனியா காந்தி, ராகுல் காந்தி இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும், அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் உடல் மீது மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து. மன்மோகன் சிங் உடலுக்கு குடும்ப வழக்கப்படி (சீக்கிய மரபுப்படி) இறுதிச் சடங்கு நடைபெற்றது. பின்னர், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, நடந்த இறுதிச் சடங்கில், ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், மன்மோகன் சிங் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.