மணீஷ் சிசோடியா திகார் சிறையில் குற்றவாளிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாக தேசிய செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் குற்றச்சாட்டு.
மதுபான கொள்கை – மணீஷ் சிசோடியா கைது:
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவை பிப்.26ஆம் தேதி 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பின்னர், முதலில் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின் மேலும் 2 நாள் காவலில் விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு:
இதையடுத்து, மணீஷ் சிசோடியாவை மார்ச் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிப்.27 முதல் சிபிஐ காவலில் இருந்த மணீஷ் சிசோடியா நேற்று முன்தினம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மணீஷ் சிசோடியா, மூத்த குடிமகன் என்ற முறையில் ஒரு தனி நபருக்கான சிறை எண்-1க்குள் அடைக்கப்பட்டுள்ளார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆம் ஆத்மி குற்றச்சாட்டு:
இந்த நிலையில், டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா திகார் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு விபாசனா (தியானம் அறை) அறை மறுக்கப்படுவதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
தியான அறை மறுப்பு:
இதுதொடர்பாக சவுரப் பரத்வாஜ் கூறுகையில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் திகார் சிறையின் விபாசனா (தியானம் செய்ய) அறையில் மணீஷ் சிசோயைவை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நீதிமன்றமும் ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், மணீஷ் சிசோடியாவுக்கு திகார் சிறையில் விபாசனா (தியானம் அறை) அறை மறுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பொருட்படுத்தாமல், சிறை எண் 1ல் குற்றவாளிகளுடன் சிசோடியா வைக்கப்பட்டுள்ளார். இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, திகார் சிறைக்கு புத்தகங்கள், கண்ணாடி மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல மணீஷ் சிசோடியாவிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து, விபாசனா தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறும் திகார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுருந்தது.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…