10, 12 தேர்வு நடத்த வாய்ப்பில்லை மணிஷ் சிசோடியா.!

Published by
murugan

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த வாய்ப்பில்லை என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதால் முதற்கட்டமாக 21 நாள்களுக்கு பிறப்பித்த ஊரடங்கு மேலும்,  19 நாள்களுக்கு பிரதமர் மோடி நீடித்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையெடுத்து, ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் கூடம் இடங்கள் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் பல பள்ளிகளில் 9 -ம் வகுப்புகள் வரை அனைத்து மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

மேலும், பல்கலைக்கழகத்தேர்வுகள் மற்றும் அரசுத்துறை சார்ந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  பல மாநிலங்களில் 10 மற்றும்  12 வகுப்பு தேர்வுகள் எப்போது  நடைபெறும் என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

அதற்கேற்றாற்போல, ஊரடங்கு மேலும் சில நாள்கள் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் அனைத்து மாநில முதல்வர்களுடன் , பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்திய போது, சில மாநில முதல்வர்கள் ஊரடங்கை  நீடிக்க வேண்டும் என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த வாய்ப்பில்லை என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.  மேலும், 9 மற்றும் 11-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி முடிவுகளை அறிவிக்கலாம் என மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்திற்கு மணிஷ் சிசோடியா பரிந்துரை செய்துள்ளார்.

சமீபத்தில், தமிழக முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, 10 வகுப்பு தேர்வு கண்டிப்பாக மாணவர்கள் எழுதவேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு! 

RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு!

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

37 minutes ago

RCB vs GT : இதுவா பெங்களூரு மைதானம்? கதறும் RCB வீரர்கள்.. அடுத்தடுத்த அவுட்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…

1 hour ago

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

2 hours ago

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

3 hours ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

4 hours ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

4 hours ago