10, 12 தேர்வு நடத்த வாய்ப்பில்லை மணிஷ் சிசோடியா.!
10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த வாய்ப்பில்லை என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதால் முதற்கட்டமாக 21 நாள்களுக்கு பிறப்பித்த ஊரடங்கு மேலும், 19 நாள்களுக்கு பிரதமர் மோடி நீடித்து உத்தரவு பிறப்பித்தார்.
இதையெடுத்து, ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் கூடம் இடங்கள் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் பல பள்ளிகளில் 9 -ம் வகுப்புகள் வரை அனைத்து மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
மேலும், பல்கலைக்கழகத்தேர்வுகள் மற்றும் அரசுத்துறை சார்ந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல மாநிலங்களில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
அதற்கேற்றாற்போல, ஊரடங்கு மேலும் சில நாள்கள் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் அனைத்து மாநில முதல்வர்களுடன் , பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்திய போது, சில மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த வாய்ப்பில்லை என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மேலும், 9 மற்றும் 11-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி முடிவுகளை அறிவிக்கலாம் என மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்திற்கு மணிஷ் சிசோடியா பரிந்துரை செய்துள்ளார்.
சமீபத்தில், தமிழக முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, 10 வகுப்பு தேர்வு கண்டிப்பாக மாணவர்கள் எழுதவேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.