சிபிஐ விசாரணைக்கு மணீஷ் சிசோடியா ஆஜர்!
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் மணீஷ் சிசோடியா ஆஜர்.
டெல்லி மதுக்கொள்கை விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று மத்திய புலனாய்வு சிபிஐ முன்பு விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக கூறப்பட்டது. டெல்லியின் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு இன்று காலை 11 மணிக்கு அவர் ஆஜராவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் மணீஷ் சிசோடியா ஆஜரானார். இதனால், டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை இன்று சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ள நிலையில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.