மணிப்பூரில் பெண் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக 5 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் கடந்த மாதம் மே 3 ஆம் தேதி பட்டியலின பழங்குடி (எஸ்டி) அந்தஸ்து கோரி மெய்டேய் சமூகத்தின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்த கலவரத்தில் இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, மாநில அரசு சூரசந்த்பூரில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளது.
இதற்கிடையில், மணிப்பூரின் இம்பாலில் உள்ள சவோம்புங் பகுதியில் ஆயுதம் ஏந்திய சிலரால் பெண் ஒருவர் முகத்தில் சுடப்பட்டு கொல்லப்பட்டார். பிறகு அடையாளம் காணமுடியாதபடி அவரது முகத்தை சிதைத்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,அவர்களிடம் இருந்து இரண்டு ஆயுதங்கள், ஐந்து தோட்டாக்கள் உட்பட ஒரு கரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…