தாமரை மலர்ந்தால் மட்டுமே மணிப்பூர் முன்னேறும்- ஜே.பி.நட்டா…!

Default Image

தாமரை மலர்ந்தால் மட்டுமே மணிப்பூர் முன்னேற்றம் அடையும் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. மணிப்பூரில் உள்ள காக்சிங் நகரில் இன்று நடைபெற்ற இளைஞர் பேரணியில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா,  மணிப்பூரில் பிரிவினைவாதமும் தீவிரவாதமும் வேண்டுமா? நிலையான சூழ்நிலை வேண்டுமா? பிரித்தாளும் சூழ்ச்சி வேண்டுமா? மக்கள் ஒற்றுமை வேண்டுமா? என்கவுண்ட்டர்கள் வேண்டுமா? அமைதி திகழ வேண்டுமா? விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் காண வேண்டுமா? போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருக்க வேண்டுமா? என்பதை மணிப்பூர் மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

மணிப்பூரில் முன்னேற்றம் பெற வேண்டுமானால் தாமரை மலர்ந்தால்தான் மாநிலம் முன்னேறும். இங்குள்ள இளைஞர்கள் விளையாட்டை விரும்புகிறார்கள் என்று நான் நம்புகிறேன். விளையாட்டுத்துறைக்கு மணிப்பூரின் பங்களிப்பை அவர் பாராட்டினார். பல பெண் வீரர்கள் மணிப்பூரிலிருந்து வருகிறார்கள் என தெரிவித்தார்.

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 2022-ல் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பாஜக, இந்த 5 மாநிலங்களில் நான்கில் ஆட்சி செய்து வருகிறது. மணிப்பூரில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 60 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக 21 இடங்களில் வெற்றி பெற்றது.

2017 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக, தேசிய மக்கள் கட்சி (என்பிபி), நாகா மக்கள் முன்னணி மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) ஆகியவற்றின் கூட்டணியால் பாஜக ஆட்சி அமைத்தது. தற்போது முதல்வர் என் பிரேன் சிங் தலைமையில் உள்ளது. மணிப்பூர் சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் 19, 2022 அன்று முடிவடைகிறது.

சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வீடியோ கான்பரன்சிங் மூலம் மணிப்பூரில் உள்ள ‘ராணி கைடின்லியு பழங்குடியினர் சுதந்திர அருங்காட்சியகத்திற்கு’ அடிக்கல் நாட்டினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்