மணிப்பூர் வன்முறை: உக்ருல் மாவட்டம் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலி!

violence in Ukhrul district

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் தொடர்ந்து ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு என மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 18ம் தேதி) மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் புதிய வன்முறையால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று கிராம வாசிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (ஆகஸ்ட் 18) அதிகாலை தோவாய் குகி கிராமத்தில் இருந்து பலத்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து மூன்று கிராம மக்கள் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்கள் ஜம்கோகின் ஹாக்கிப் (26), தங்கோகை ஹாக்கிப் (35) மற்றும் ஹோலன்சன் பைட் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஆகஸ்ட் 16ம் தேதி மணிப்பூர் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிபிஐ 29 பெண்கள் உட்பட 53 அதிகாரிகளை குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்