மணிப்பூரில் தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக இந்திய ராணுவம் தகவல்.
மணிப்பூர் மாநிலத்தில் மோரே கிராமத்தில் குக்கி, மைத்தேயி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இரு இன குழுக்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் பல்வேறு வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மணிப்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரக்காரர்களை கண்டவுடன் சுட மணிப்பூர் ஆளுநர் அனுமதி வழங்கினார்.
கலவரத்தை அடக்கும் நோக்கில் ஏற்கனவே 144 தடை உத்தரவு அளிக்கப்பட்டு, காவல்துறை, ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், மணிப்பூரில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் இரு இன குழுக்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறை நடந்த பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும், வன்முறை நிகழ்ந்த பதற்றமான பகுதிகளில் ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர் எனவும் கூறியுள்ளனர். எனவே, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் மணிப்பூரில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
அசாமில் உள்ள 2 விமானநிலையங்களில் இருந்து IAF ஆனது C17 Globemaster மற்றும் AN 32 விமானங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொள்ளப்டுகிறது. மணிப்பூரின் பாதுகாப்பு நிலைமை குறித்த பல போலி வீடியோக்கள் பரப்பப்படுவதைப் பற்றி இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை முகாம் மீதான தாக்குதலின் வீடியோ உட்பட மணிப்பூரில் உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்த போலி வீடியோக்கள் பரப்பப்படுகின்றன. இதனை நம்ப வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…