மணிப்பூர் வன்முறை: பதற்றமான சூழ்நிலையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்பு!
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் தொடர்ந்து ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு என மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8 துப்பாக்கிகள் மற்றும் 112 தோட்டாக்கள் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆறு வெடிபொருட்களையும் ராணுவத்தினர் கைப்பற்றியதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் பிஷ்ணுபூர், சுராசந்த்பூர், தெங்னௌபால், காங்போக்பி ஆகிய மாவட்டங்களில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.