மணிப்பூர் வன்முறை – இணையதள சேவைக்கான தடை நீட்டிப்பு!
மணிப்பூரில் ஜூலை 10 ஆம் தேதி மாலை 3 மணி வரை இணைய சேவைகள் நிறுத்தி வைப்பு.
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக வன்முறை தொடர்ந்து வந்த நிலையில், இந்த வன்முறையை கட்டுப்படுத்த மாத்தையா, மாநில அரசுகள் தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த வநும்முறையால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பல காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த வன்முறை தொடர்பாக வதந்தியாக செய்திகள் பரப்பக்கூடும் என்பதால், அங்கு மே-3-ஆம் தேதி முதல் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது அமைதி மற்றும் பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க, ஜூலை 10 ஆம் தேதி மாலை 3 மணி வரை மாநிலத்தில் இணைய சேவைகளை மேலும் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாக மணிப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.