Categories: இந்தியா

மணிப்பூர் வன்முறை – அரசமைப்பு சட்டப்பிரிவு 355-ஐ அமல்படுத்தியது மத்திய அரசு!

Published by
பாலா கலியமூர்த்தி

மணிப்பூரில் வன்முறையை தொடர்ந்து அரசமைப்பு சட்டப்பிரிவு 355-ஐ அமல்படுத்தியது மத்திய அரசு.

கடந்த சில நாட்களாக மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த கலவரத்தில்  பல்வேறு வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன.  நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மணிப்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டு, கலவரக்காரர்களை கண்டவுடன் சுட மணிப்பூர் ஆளுநர் அனுமதி வழங்கியிருந்தார்.

கலவரத்தை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காவல்துறை, இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், மணிப்பூரில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்த சமயத்தில், மணிப்பூர் மாநிலத்தில் இரு இன குழுக்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக நேற்று இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.

பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டதாகவும், வன்முறை நிகழ்ந்த பதற்றமான பகுதிகளில் ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. வன்முறை நடந்த பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும் கலவரம் காரணமாக மணிப்பூருக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இரு இன குழுக்களிடையே ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், அரசமைப்பு சட்டப்பிரிவு 355 அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அரசியமைப்பு சட்டப்பிரிவு 355-ஐ அமலபடுத்தியுள்ளது மத்திய அரசு. இதுவரை 20,000க்கு மேற்பட்டோர் மணிப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 600க்கும் மேல் அண்டை மாநிலங்களான அசாம், மிசோரத்துக்கு தப்பி சென்றுள்ளனர்.

இந்த சமயத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், அரசமைப்பு சட்டப்பிரிவு 355-ஐ ,அத்தியா அரசு அமல்படுத்தியுள்ளது. சட்டப்பிரிவு 355 என்பது உள்நாட்டு வன்முறைகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் பிரிவாகும். இதனிடையே, உளவுத்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அசுதோஷ் சின்ஹாவை, சட்டம் ஒழுங்கு நிலைமையின் ஒட்டுமொத்த செயல்பாட்டுத் தளபதியாக மத்திய அரசு நியமித்திருந்தது.

மேலும், வன்முறையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இருக்கும் அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங் அரசாங்கத்தின் பாதுகாப்பு ஆலோசகராக CRPF-இன் முன்னாள் DG குல்தீப் சிங்கையும் மத்திய அரசு நியமித்தது. இந்த நியமனங்கள், மோதல்களைக் கட்டுப்படுத்துவதில் மாநிலம் தவறியதால, சட்டப்பிரிவு 355-வது பிரிவைப் பயன்படுத்துவதற்கான மத்திய அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதி என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

4 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

5 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

6 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

7 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

7 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

8 hours ago