மணிப்பூர் வன்முறை- அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது..!
மணிப்பூர் வன்முறை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
மணிப்பூர் வன்முறை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனா, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளன.
பிரதமர் மோடி பங்கேற்காததால் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் எம்.பி திருச்சி சிவா, அதிமுக சார்பில் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் மே 3-ஆம் தேதி முதல் தொடர்ந்து வன்முறை நடந்து வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறதஹு.