மணிப்பூர் வீடியோ விவகாரம்- சிபிஐ வழக்குப்பதிவு..!
மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியான விவகாரத்தில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், இந்த கலவரத்தில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில், மணிப்பூர் கலவரத்தின் போது நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வெளியானது.
இந்த வீடியோ வெளியாகி இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிலையில், மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியான விவகாரத்தில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. மணிப்பூரில் வீடியோ வெளியான வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், விசாரணை தொடங்கியுள்ளது. பெண்கள் வன்கொடுமை தொடர்பான வீடியோ வெளியான விவகாரத்தில், இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.