மணிப்பூரில் வன்முறை சம்பவங்களின்போது, நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடுமைக்கு உள்ளான இரண்டு பெண்களின் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இந்த விவகாரம் தொடர்பான வீடியோ வெளியானதால் வெளியில் அனைவருக்கும் இது அறியப்பட்ட ஒன்றாக பார்க்கப்படுகிறது. மணிப்பூர் பெண்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவம் போல் மற்ற பெண்களுக்கும் இதுபோல நடந்து கொண்டிருக்கிறது, இதனால் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை தடுக்க வழிமுறை கொண்டுவரவேண்டும் என தலைமை நீதிபதி தன் கருத்தை முன்வைத்தார்.
பாதிக்கப்பட்ட இரு பெண்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, சிபிஐ இந்த வழக்கில் விசாரிப்பது மற்றும் வழக்கு அசாமுக்கு மாற்றப்படுவதற்கும் உடன்பாடு இல்லை என வாதங்களை முன்வைத்தார், இதற்கு அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கு மணிப்பூருக்கு வெளியே கொண்டுசெல்லவேண்டும் என்றும் அசாம் என குறிப்பிடவில்லை என வாதிட்டார்.
இதைக்கேட்ட தலைமை நீதிபதி, வன்முறை தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை என கேட்டார். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் தந்தை கொல்லப்பட்டதாகவும், உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தலையிடும் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இதில் நம்பிக்கை எங்கே இருக்கிறது, இந்த வழக்கில் சுதந்திரமாக விசாரிக்கும் ஓவர் குழு தேவை என கபில் சிபல் வாதிட்டார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கண்காணிப்பு இருந்தாலும் மத்திய அரசுக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார். இதனையடுத்து உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் விசாரித்துவிட்டு சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது.
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…