அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மணிப்பூர் தீவிரவாத அமைப்பு.!
மணிப்பூர் மாநிலத்தில் மிகவும் பழமை வாய்ந்த தீவிரவாதக் குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) குழுவானது கடந்த 1964ஆன் ஆண்டு நவம்பர் 24இல் அரிம்பம் சமரேந்திர சிங் தலைமையில் உருவாக்கப்பட்டது.
மைத்தேயி இனத்தை சேர்ந்த கிளர்ச்சி இயக்கமாக அறியப்படும் இந்த பழமை வாய்ந்த இயக்கமானது கடந்த 1990 காலகட்டத்தில் மணிப்பூரை இந்தியாவில் இருந்து வெளியேற்றி மனிப்பூரை தனி நாடாக மாற்ற முயற்சித்தது. இதற்காக ஆயுதம் ஏந்திய ராணுவப்படை உருவாக்கப்பட்டது.
மணிப்பூரின் பழமையான தீவிரவாதக் குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியானது மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக பதிவிட்டுள்ளார்.
சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அதில் அவர் குறிப்பிடுகையில், “ஒரு வரலாற்று மைல்கல்லை மத்திய அரசு எட்டியது. வடகிழக்கில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட மோடி அரசின் இடைவிடாத முயற்சிகள் காரணமாக ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) இன்று டெல்லியில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் மணிப்பூரில் புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது.” என்று அமித்ஷா பதிவிட்டார்.
“மணிப்பூரின் பழமையான ஆயுதக் குழுவான UNLF, வன்முறையைக் கைவிட்டு, நமது நாட்டு சட்டதிட்டங்களுடன் சேர ஒப்புக்கொண்டுள்ளது. இந்திய ஜனநாயக செயல்முறைகளுக்கு அவர்களை வரவேற்கிறேன். அமைதி மற்றும் முன்னேற்றப் பாதையில் அவர்களின் பயணத்தில் அனைத்து நல்வாழ்த்துக்களையும் பெற விரும்புகிறேன்.” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டார்.