மணிப்பூர் டூ மும்பை: மீண்டும் நடைப்பயணத்தை தொடங்கும் ராகுல்… யாத்திரையின் லோகோ வெளியீடு!

Published by
பாலா கலியமூர்த்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மீண்டும் தொடங்கவுள்ள இந்திய ஒற்றுணை நடைபயணத்தின் லோகோ, அதன் டேக்லைன் மற்றும் குறிக்கோளை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வெளியிட்டார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் அக்கட்சியின் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொண்டார்.

ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரை பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், இரண்டாவது கட்ட பாத யாத்திரையை  நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி வரையில் நடத்த ராகுல் திட்டமிட்டுள்ளார். அதன்படி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இந்த பாத யாத்திரையை வரும் 14-ம் தேதி ராகுல் காந்தி தொடங்க உள்ளார். இந்த யாத்திரைக்கு ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மற்றொரு மைல்கல்லை எட்டிய இந்தியா! எல்-1 புள்ளியை அடைந்த ஆதித்யா விண்கலம்!

ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரை மணிப்பூரின் இம்பாலில் தொடங்கி நாட்டின் 15 மாநிலங்கள் வழியாக சென்று மும்பையில் நிறைவடைகிறது. மொத்தம் 6,713 கி.மீ. தூரம் கொண்ட இந்த யாத்திரை பேருந்துகளிலும், நடைபயணத்திலும் மேற்கொள்ளப்படும்.

இந்த சூழலில், ராகுல் மீண்டும் தொடங்கவுள்ள நடைபயணத்தின் (பாரத் ஜோடோ நியாய யாத்ரா) லோகோ மற்றும் “நியாய கா ஹக் மில்னே தக்” என்ற டேக்லைனையும் கார்கே வெளியிட்டார். இதன்பின் கார்கே கூறியதாவது, ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ நாட்டின் அடிப்படை சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் கவனம் செலுத்தும். நாடாளுமன்றத்தில் பிரச்சனைகளை எழுப்புவதற்கு அரசு வாய்ப்பளிக்காததால், இந்த யாத்திரையை நடத்துவதாகவும் தெரிவித்தார்.

Recent Posts

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

2 hours ago

பொங்கலை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே 9 நாட்களுக்கு சிறப்பு ரயில்.!

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…

3 hours ago

புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்… பொங்கல் பரிசு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…

3 hours ago

என்னோட கணவர் இவர்தான்!! முடிந்தது நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம்! குவியும் வாழ்த்து…

கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…

4 hours ago

பெண் உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…

4 hours ago

ஜனவரி இறுதிக்குள் பொறுப்பாளர்கள் நியமனம்… மார்ச் முதல் விஜய் சுற்றுப்பயணம்.! தவெகவின் அடுத்தடுத்த நகர்வு…

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…

5 hours ago