மணிப்பூர் மாநிலத்திற்கு அமைதி தேவை – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!
மணிப்பூர் மாநிலத்திற்கு அமைதி தேவை எனவும், இயல்புநிலை திரும்ப ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் கலவரம் தொடர்பாக அங்கு நேரில் சென்று விசாரிக்க இம்பால் சென்றடைந்தார். இரண்டு நாள் பயணமாக திட்டமிட்டுள்ள ராகுல் காந்தி, மணிப்பூரில் இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மணிப்பூர் மாநிலத்திற்கு அமைதி தேவை என்றும், அமைதி திரும்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் ராகுல்காந்தி கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும், நிவாரண முகாம்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய அரசு உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவிடம் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
மணிப்பூரில் கடந்த மே மாதம் வெடித்த கலவரம் தொடர்ந்து பல நாட்கள் ஆகியும் இன்னும் அங்கு பதற்றமான சூழ்நிலை தான் நிலவி வருகிறது. மெய்ட்டி சமூக மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து மெய்ட்டி மற்றும் குக்கி இன மக்களிடையே வன்முறை வெடித்ததில் கிட்டத்தட்ட 110 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.