சங்காய் திருவிழாவால் மணிப்பூர் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாதலமாக மாறும்.! பிரதமர் மோடி புகழாரம்.!
மணிப்பூரில் நடைபெறும் சங்காய் திருவிழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்துகொண்டு மாநிலத்தின் பெருமை குறித்து உரையாற்றினார்.
மணிப்பூரில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கடைசி 10 நாளில் சங்காய் திருவிழா நடைபெறும். இந்த விழாவானது. தாமின் மான் எனும் மான் வகையின் நினைவாக இந்த திருவிழா நடைபெறுகிறது. இதில் மணிப்பூரின் பழம்பெருமையை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் நடைபெபெற்று வருகிறது.
இந்தாண்டு நடைபெறும் மணிப்பூர் சங்காய் விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக பங்கேற்று பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
கலந்துகொண்டு அவர் பேசுகையில் , நம்முடைய இயற்கை, விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய திருவிழாக்களை கொண்டாடுவதன் மூலம் நமது நாட்டின் இயற்கை நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறி விடுகிறது என குறிப்பிட்டார்.
இந்த சங்காய் திருவிழா மணிப்பூரின் மிக பிரபலமான திருவிழா ஆகும். இதன் மூலம் மணிப்பூரை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கலாம். இந்த விழாவானது மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் வகையில் இருக்கும் என்பதில் தனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது எனவும் பிரதமர் மோடி காணொளி வாயிலாக தெரிவித்தார்.