மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிப்பு.
மணிப்பூர் இரு சமூகத்துக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கும் வேலை வழங்கப்படும் என்றும் மத்திய அரசும், மணிப்பூர் மாநில அரசும் நிதிச்சுமையை சமமாக ஏற்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் இடையே நேற்று மாலை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் யிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் போது, வதந்திகளை கட்டுப்படுத்த பிரத்யேக தொலைபேசி இணைப்புகளை அமைக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் மே 3-ம் தேதி இரு சமூகத்துக்கு இடையே வன்முறை வெடித்ததில், இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான குழு மனு அளித்துள்ளது. குடியரசு தலைவரிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…