மணியாப்பூர் கலவரம் – மணிப்பூர் வன்முறையால் மிசோரமுக்கு இடம்பெயர்ந்த மக்கள்…!
இடம்பெயர்ந்த மணிப்பூர் மக்களுக்காக ஒன்றிய அரசு நிதி வழங்காததால், நன்கொடை மூலம் நிதி திரட்ட மிசோரம் அரசு திட்டமிட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மணிப்பூரில் வானுறை தொடர்ந்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த வன்முரையில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், மணிப்பூர் வன்முறையால் சுமார் 12,000 பேர் மிசோரம் மாநிலத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய ஒன்றிய அரசு நிதி வழங்காததால், நன்கொடை மூலம் நிதி திரட்ட மிசோரம் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென குழு அமைக்கப்பட்டு மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.