மணிப்பூர்: புத்தாண்டில் மீண்டும் வெடித்த கலவரம் – 4 பேர் உயிரிழப்பு!

manipur new violence

மணிப்பூர் மாநிலத்தில் புதிய வன்முறை வெடித்ததை அடுத்து, மணிப்பூர் அரசு நேற்று (திங்களன்று) தௌபால் மற்றும் இம்பால் போன்ற மேற்கு மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.

நேற்று மாலை தௌபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் பகுதியில் அடையாளம் தெரியாத  நபர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களது உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பின்னர், அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங், லிலாங்கில் வசிப்பவர்களிடம் “இனி எந்த வன்முறையையும் ஏற்படுத்த வேண்டாம்” என்றும், அப்பகுதியில் அமைதியைப் பின் பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தூத்துக்குடி மாணவர்களே நாளை முதல் அரையாண்டு தேர்வுகள்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இரு சமூத்தினரிடையே ஏற்பட்ட கலவரமானது நாட்டையே அதிரவைத்தது. அதிலும், அங்கு இரு பெண்களுக்கு ஒரு கொடூர கும்பலால் நேர்ந்த துயரமான சம்பவம் பலரது இதயத்தை உலுக்கியது.

இந்த கலவரமானது, மைத்தேயி இன மக்கள் தங்களை பழங்குடி இன பிரிவில் சேர்க்க கோரியபோது, அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததில் இருந்து துவங்கியது. இந்த கலவரத்தில் இதுவரை கிட்டத்தட்ட 180 க்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 24 01 2025
Donald trump
Seeman - Thirumavalavan - LTTE leader Prbakaran
Earthquake in Myanmar
Academy Awards 2025
bussy anand
Tungsten madurai