ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை 2.O.! அனுமதி மறுத்த மாநில அரசு.? 

Rahul gandhi - Bharat Unity Yatra

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மூலம் தனது பிரச்சாரத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். அதேபோல, தற்போது கிழக்கில் இருந்து மேற்கு பகுதி மாநிலங்களை உள்ளடக்கிய ஒற்றுமை யாத்திரையை மீண்டும் நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார்.

மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி!

வரும் ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் இருந்து இந்த ஒற்றுமை யாத்திரையை தொடங்க ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் முதல் நடைபெற்று வரும் மோதல் போக்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், குறிப்பிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதிக்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இது குறித்து மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைமை கூறுகையில், மணிப்பூரில் யாத்திரை ஆரம்பிப்பதற்கு இதுவரை மாநில முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பெரும் அளவில் மக்கள் கூடுவதற்கும் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதியில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மணிப்பூரின் வேறு பகுதியிலோ அல்லது எந்த பகுதியில் அனுமதி தரப்படுகிறதோ அந்த பகுதியில் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்