மணிப்பூர் நீதிமன்றம் உத்தரவு.. நிபந்தனைகளுடன் இன்டர்நெட் உபயோகிக்கலாம்.!
மணிப்பூரில் கட்டுப்பாட்டில் உள்ள சில இடங்களில் பொதுமக்களுக்கு இணைய சேவைகளை வழங்க நீதிமன்றம் உத்தரவு.
மணிப்பூரில் கடந்த மே 4 முதல் இணையசேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் பலர் வைத்த கோரிக்கைகளின் பேரில், மணிப்பூர் உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவை வழங்கியது.
இந்த உத்தரவில் மாநில அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சில நியமிக்கப்பட்ட இடங்களில், பொதுமக்களுக்கு வரையறுக்கப்பட்ட இணைய சேவைகளை வழங்க உத்தரவிட்டது. இதன்படி சமூகவலை தளங்கள் இல்லாமல் மற்ற அவசர சேவைகளுக்காக இணையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இந்த வழக்கை ஜூன் 23ஆம் தேதி மீண்டும் உயர்நீதிமன்றம் விசாரிப்பதாக கூறியது.
மணிப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மைதேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட இன மோதல்கள் வன்முறையாக வெடித்ததில், 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு இணையதள சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த இடைக்கால உத்தரவானது, தற்போது நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் தங்களது அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பொதுமக்கள் மேற்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு உத்தரவிடப்பட்டது.