திடீரென நீக்கப்பட்ட அமைச்சர்கள்! புதிதாய் 5 அமைச்சர்களை நியமித்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்

Default Image

மணிப்பூரில் 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் 5 பேரை அம்மாநில முதல்வர் நியமித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில அமைச்சரவையில் இருந்த 3 அமைச்சர்கள் திடீரென அம்மாநில முதல்வர், அமைச்சர் பதிவியில் இருந்து நீக்கினார். இது மணிப்பூர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீக்கப்பட்ட அமைச்சர்கள்:

அதன்படி வேளாண், கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் வி.ஹங்கலியன், சமூகநலன் மற்றும் ஒத்துழைப்பு துறை அமைச்சர் நெம்ச்சா கிப்கென் மற்றம் கல்வி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ராதேஷ்யம் சிங் ஆகிய அமைச்சர்களை அம்மாநில முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய அமைச்சர்களை பரிந்துரைக்கவுள்ளதாகம் செய்திகள் வெளியானது. அதன்படி முதல்வர் பைரன் சிங் அமைச்சர்கள் பதவிக்கு 5 பேரை நியமித்துள்ளார்.

புதிய அமைச்சர்கள்:

  • அதன்படி எஸ்.ராஜன், கல்வி, மீன்வளம் மற்றும் கட்டளை பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • நுகர்வோர் , உணவு மற்றும் பொது விநியோகம், சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் பொறுப்பை சத்தியபிரதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • பழங்குடியினர் விவகாரங்கள், மலைகள், போக்குவரத்து மற்றும் பொது நிர்வாகத் துறை வுங்சால்ஜின் வால்டேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • வேளாண்மை, கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் சுற்றுலா துறையின் அமைச்சராக ஓ – லுக்கோய் சிங் நியமிக்கப்பட்டார்.
  • சமூக நலன், ஒத்துழைப்பு மற்றும் நகராட்சி நிர்வாகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு ஆகியவற்றுக்கு ஒக்ரம் ஹென்றி சிங் நியமிக்கப்பட்டார்.

எஞ்சிய பதவிகள்:

வீடு, பணியாளர்கள், திட்டமிடல், வருவாய் மற்றும் வேறு எந்தத் துறைக்கும் ஒதுக்கப்படாத அமைச்சர்களின் பதவியை முதலமைச்சர் தொடர்ந்து வகிப்பார் என தலைமைச் செயலாளர் ராஜேஷ் குமார் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தலைமையில்:

பதவி வகிக்கப்பட்ட  புதிய அமைச்சர்கள் அனைவரும் மணிப்பூர் ஆளுநரான நஜ்மா ஹெப்துல்லாவை ராஜ் பவனில் சந்தித்து, அமைச்சர்களாக பதவியேற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்