மணிப்பூர் கொடூரம்; உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு முன் இரு பெண்களின் மனு விசாரணை.!

SupCourt MV

மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்களின்போது, நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடுமைக்கு உள்ளான இரண்டு பெண்களும் நீதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இரு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச்சென்ற கொடூர குழு கூட்டு பலாத்காரம் செய்ததாக வெளிவந்த தகவல் மற்றும் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது.

மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை மிகப்பெரும் கலவரமாக வெடித்தது, மேலும் கடந்த மே 4 முதல் நடந்துவரும் இந்த வன்முறை சம்பவத்தை அடுத்த இதில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர மே 4 ஆம் தேதி இரு பெண்களுக்கும் நடந்த இந்த அநீதி கடந்த ஜூலை 19 ஆம் தேதி இணையத்தில் வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக இரு பெண்களும் தொடர்ந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடக்க இருக்கிறது. ஏற்கனவே இந்த வீடியோ வெளியானபோது, தலைமை நீதிபதி சந்திரசூட், பெண்களுக்கு நிகழ்ந்துள்ள அநீதி குறித்து மிகுந்த வருத்தத்துடன் மாநில மற்றும் மத்திய அரசுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் வழக்கானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் வழக்கை மணிப்பூருக்கு வெளியே நடத்தவும் உச்சநீதிமன்ற அனுமதிக்கு மத்திய அரசு கோரியுள்ள நிலையில், இந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்