மணிப்பூர் தாக்குதல் மோடியால் நாட்டை காக்க முடியாது என்பதை காட்டுகிறது – ராகுல் காந்தி!

மணிப்பூர் தாக்குதல் மோடியால் நாட்டை காக்க முடியாது என்பதை காட்டுகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சூராசந்த்பூர் எனும் பகுதியில் நேற்று அசாம் ரைபிள்ஸ் படையினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து ராகுல் காந்தி தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், மணிப்பூரில் ராணுவ வாகன அணிவகுப்பு மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மோடியால் நாட்டை பாதுகாக்க இயலாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாகவும், தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் தியாகத்தை தேசம் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கும் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
मणिपुर में सेना के क़ाफ़िले पर हुए आतंकी हमले से एक बार फिर साबित होता है कि मोदी सरकार राष्ट्र की सुरक्षा करने में असमर्थ है।
शहीदों को मेरी श्रद्धांजलि व उनके परिवारजनों को शोक संवेदनाएँ। देश आपके बलिदान को याद रखेगा।
— Rahul Gandhi (@RahulGandhi) November 13, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025