திருக்குறளை தொடர்ந்து உலக மொழிகளில் ‘மணிமேகலை’ – செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அதிரடி நடவடிக்கை..!
திருக்குறளை தொடர்ந்து மணிமேகலையை உலக மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான பணிகளை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கியுள்ளது.
திருக்குறளை தொடர்ந்து மணிமேகலையை உலக மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான பணிகளை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கியுள்ளது. சிங்களம், மலாய், சீனா, கொரியன், மங்கோலியன், ஜப்பான், உள்ளிட்ட 20 உலக மொழிகளில் மணிமேகலையை மொழிபெயர்க்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
பௌத்த தத்துவங்களை பேசும் சங்ககால இலக்கியமான மணிமேகலையின் பெருமையை பௌத்தமதம் பரவலாக உள்ள இலங்கை, சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சங்க இலக்கியங்கள் அனைத்தையும் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மொழி பெயர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.