திரிபுரா முதல்வராக 2-வது முறையாக மாணிக் சாஹா, இன்று பதவியேற்பு.!
திரிபுராவின் புதிய முதலமைச்சராக இரண்டாவது முறையாக மாணிக் சாஹா, இன்று பதவியேற்கிறார்.
திரிபுரா மாநில முதல்வராக பாஜக மூத்த தலைவர் டாக்டர் மாணிக் சாஹா, இன்று பதவியேற்கிறார். அகர்தலாவில் உள்ள சுவாமி விவேகானந்தர் மைதானத்தில் புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெறுகிறது. திரிபுரா முதலமைச்சர் சாஹாவுக்கு, ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், வடகிழக்கு மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் கலந்து கொள்கின்றனர்.