பள்ளிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் – மாநில அரசு உத்தரவு
கொரோனா அச்சறுத்தலுக்கு மத்தியில் அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு.
கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தலை வழங்கி வருகிறது. அதன்படி, மீண்டும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி கடைபிடிப்பது மற்றும் சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை செய்வது உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் சில நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் உத்தரகாண்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தெர்மல் ஸ்கிரீனிங்கைப் பயன்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வியின் மாநில இயக்குநர் ஜெனரல் பன்ஷிதர் திவாரி உத்தரவிட்டார்.
இதற்கு முன் முன்னதாக, கர்நாடக அரசு அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியது. இதனைத்தொடர்ந்து, உத்தரகாண்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.