பொதுமுடக்கம் முடிந்தபின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் தேர்வுகள் நடைபெறுமா இல்லை ரத்து செய்யப்படுமா என்று மாணவர்களில் மத்தியில் குழப்பம் நிலவி வந்தன. இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு முடிந்து, நிலைமை சரியான பின்னர் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இதனிடையே 10, 12 ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய கோரி டெல்லி துணை முதல்வர் மணீஷ்சிசோடியா தெரிவித்திருந்த நிலையில், தற்போது தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என்று சிபிஎஸ்இ தரப்பில் விளக்கமளித்துள்ளது. மேலும், தேர்வு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. போதிய கால அவகாசம் இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தில் பொதுமுடக்கம் முடிந்த பின்னர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…