சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் (நவமபர்) 16ஆம் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது. நவம்பர் 17, கார்த்திகை 1ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அன்றிலிருந்து சரியாக 41 நாள் ஒரு மண்டலம் கழித்து இன்று (டிசம்பர் 27) மார்கழி மாதம் 11ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மண்டல பூஜை நிகழ்வுக்காக இன்று அனுமதி பெறும் பக்தர்களின் எண்ணிக்கையானது 70 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜைக்கு தயாராகும் சபரிமலை.! மீண்டும் எப்போது நடை திறப்பு.?
மண்டல பூஜை நடைபெறுவதை ஒட்டி, நேற்று திருவிதாங்கூர் மகாராஜா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தானமாக அளித்த 450 சவரன் எடையுள்ள தங்க அங்கி மலை பாதை வழியாக நேற்று சபரிமலைக்கு கொண்டுவரப்பட்டது. தங்க அங்கி கொண்டு வருவதை ஒட்டி நேற்று பிற்பகல் முதல் மாலை வரையில் மலை பாதையில் பக்தர்கள் வர அனுமதிக்கப்படவில்லை. நேற்று மாலை 6.30 மணிக்கு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு 11 மணி வரை பக்த்ர்கள் தரிசனத்திற்காக நடை திறந்து இருந்தது.
இன்று மண்டல பூஜை தினத்தன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தற்போது சபரிமலையில், பகதர்கள் சரண கோஷங்கள் விண்ண பிளக்க மண்டல பூஜை விழா தொடங்கியுள்ளது. தற்போது பக்கதர்களுக்கு இன்று மதியம் 1.30 மணிவரையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதன் பிறகு பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்ட்டு இரவு 11.30 மணி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர்.
மண்டல பூஜை முடிந்து இன்று இரவு 11.30மணிக்கு நடை சாத்தப்பட்டு, மீண்டும் மகர விளக்க பூஜைக்காக ஜனவரி 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படும். ஜனவரி 31 முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். அதுக்கடுத்து ஜனவரி 20 ஆம் தேதி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…