கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்த்ர்கள் கூட்டம் எந்த வருடத்தை காட்டிலும், இந்த வருடம் அதிகமாக உள்ளது. இந்த வருடம் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் (நவமபர்) 16ஆம் தேதி மாலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டது. நவம்பர் 17, கார்த்திகை 1ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அன்றிலிருந்து சரியாக 41 நாள் ஒரு மண்டலம் கழித்து நாளை (டிசம்பர் 27) மார்கழி மாதம் 11ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும்.
மண்டல பூஜை நிகழ்வு நாளை நடைபெறுவதை ஒட்டி, நாளை அனுமதி பெரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சுமார் 80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரையிலான பக்தர்கள் தினசரி அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், நாளை 70 ஆயிரம் முக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது – சுகாதாரத்துறை அமைச்சர்.!
நாளை மண்டல பூஜை நடைபெறுவதை ஒட்டி, இன்று திருவிதாங்கூர் மகாராஜா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தானமாக அளித்த 450 சவரன் எடையுள்ள தங்க அங்கி மலை பாதை வழியாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தங்க அங்கியனது 1973ஆம் ஆண்டு தனமாக வழங்கப்பட்டது.
இன்று மாலை 5.30 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தங்க அங்கியானது கொண்டுவரப்படும். அதற்காக இன்று பிற்பகல் முதலே மலை பாதை முழுவதும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இன்று மாலை 6.30 மணிக்கு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு 11 மணி வரை பூஜைகள் நடைபெற்ற பின்னர் நடை சாத்தப்படும்.
அதற்குப்பிறகு நாளை காலை வழக்கம் போல காலை 3 மணிக்கு தரிசனதிற்காக நடைதிறக்கப்படும். பின்னர் 12.30 மணிக்கு மண்டல பூஜை தொடங்கப்படும். அதன் பிறகு 1.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்டும்.பிற்பகல் 3 மணி முதல் இரவு 11.30 மணி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர்.
நாளை இரவு 11.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் மகர விளக்க பூஜைக்காக ஜனவரி 30 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும். ஜனவரி 15 ஆம் தேதி, தை 1ஆம் நாள் மகர விளக்கு ஜோதி பொன்னம்பலமேட்டில் ஏற்றப்படும். பக்தர்கள் வருகையை சபரிமலை ஐயப்பன் ஒளி வடிவில் பக்தர்களை காண்பதாக ஐதீகம். அதுக்கடுத்து ஜனவரி 20 ஆம் தேதி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு அன்று இரவு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்படும்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…