ஆர்டர் செய்த பர்கரை டெலிவரி செய்ததால் மேலாளர் மற்றும் வாடிக்கையாளர் கைது.!
ஆன்லைன் டெலிவரிக்கு தடை செய்யப்பட்ட நகரில் இருந்து பர்கர் ஆர்டர் செய்ததால், பர்கர் டெலிவரி செய்த கடை மேனேஜரும், வாடிக்கையாளருக்கு கைது செய்யப்பட்டனர்.
கொரோனா முன்னெச்செரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு பார்சல் வழங்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களும் குறிப்பிட்ட நேரங்களில் இயங்க அனுமதி அளிக்கப்பட்ட்டது.
அதிலும் சில பகுதிகளில் ஆன்லைன் டெலிவரி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சண்டிகாரில் ஒருவர் பன்சுலா நகரில் உள்ள உணவகத்தில் இருந்து ஆன்லைனில் பர்கர் ஆர்டர் செய்துள்ளார். பன்சுலா நகரில் இருந்து பர்கர் வந்துள்ளது. இதனால், அந்த பன்சுலா நகர உணவக மேனேஜரும், சண்டிகார் வாடிக்கையாளரும் ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனெனில், சண்டிகரில் ஆன்லைன் டெலிவரி தடை செய்யப்பட்டுள்ளது. பன்சுலாவில் ஆன்லைன் டெலிவரிக்கு தடையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரு நகருக்கும் இடையே சுமார் 12 கிமீ இடைவெளி இருப்பது உள்ளது.