மகனுக்கு மருந்து வாங்க 2 நாட்கள் சைக்கிளில் பயணித்த தந்தை-நெகிழ்ச்சி சம்பவம்..!

Default Image

கர்நாடகாவை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் தனது மகனின் உடல்நலத்திற்காக மருந்து வாங்க 300 கி.மீ. சைக்கிளில் பயணித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ஆனந்த் என்பவர் மைசூருக்கு அருகில்  நரசிபூர் தாலுக்காவில் உள்ள கனிகன கோப்பலு என்ற இடத்தில் வசிக்கிறார். இவர் ஒரு கட்டிட வேலை பார்க்கும் கூலி தொழிலாளி. வறுமையில் குடும்பம் நடத்தும் இவரின் மகனுக்கு நரம்பு சம்பத்தப்பட்ட பாதிப்பு உள்ளது.  மைசூர் மருத்துவமனைகளில் குணமடையாததால் அவரது மகனை பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் மருத்துவம் பார்த்து வருகிறார். மேலும் இவரது மகனை இரு மாதங்களுக்கு ஒரு முறை நேரில் அழைத்து வர வேண்டும் என்றும் மகனுக்கு 18 வயதாகும் வரை மருந்துகளை ஒரு நாள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக கர்நாடகாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. நாள் தவறாமல் மகன் மருந்து சாப்பிட வேண்டும் என்பதற்காக மைசூரில் உள்ள கடைகளில் கேட்டு பார்த்துவிட்டார். மருந்து எங்கும் கிடைக்காததால், மகனின் நலனுக்காக பெங்களூர் செல்ல சைக்கிளில் பயணித்தார். 2 நாட்கள் பயணம் செய்து பெங்களூரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

சைக்கிளில் வெகுதூரம் பயணித்து வந்த இவரை பார்த்த மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் நெகிழ்ந்து போயினர். அதனால் ஆனந்தின் நிலையை பார்த்த மருத்துவர்கள் மகனுக்கு தேவையான மருந்துகளை கொடுத்து அனுப்பியதோடு மேலும் 1000 ருபாய் செலவுக்காக கொடுத்தனுப்பியுள்ளனர். மருந்தையும் பணத்தையும் பெற்றுக்கொண்டு மீண்டும் 2 நாள் பயணித்து வீட்டிற்கு வந்துள்ளார் ஆனந்த். மகனின் நலனுக்காக சைக்கிளில் 300 கி.மீ. பயணித்ததும் எனக்கு மகிழ்ச்சியே என்று தெரிவித்துள்ளார் ஆனந்த்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்