பிரியாணியில் எக்ஸ்ட்ரா லெக் பீஸ் இல்லை…தெலுங்கானா அமைச்சரிடம் ட்விட்டரில் புகார்!
ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரியாணியில் கூடுதல் லெக் பீஸ் இல்லை என்று தெலுங்கானா அமைச்சர் கேடிஆரிடம் புகார்,பதில் ட்வீட் செய்த அமைச்சர்!
கொரோனா ஒரு புறம் வாட்டி வதைக்கும் நிலையில் தெலுங்கானாவால் ஒரு நபர் ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரியாணியில் லெக் பீஸ் இல்லை என்று தெலுங்கானா நகராட்சி நிர்வாக அமைச்சர் கே டி.ராமராவ்விடம் ட்விட்டரில் புகார் தெரிவித்துள்ளார்.
அதில் அந்த நபர் தான் Zomatto வில் பிரியாணியுடன் கூடுதல் மசாலா மற்றும் கூடுதல் லெக் பீஸ் ஆர்டர் செய்ததாகவும், அதில் இரண்டுமே இல்லை என்றும் இதுதான் மக்களுக்கு சேவை செய்யும் விதமா என்று தெலுங்கானா நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.டி.ராமராவ் மற்றும் Zomatto வை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.டி.ராமராவ் இதற்கு என்னை ஏன் டேக் செய்தீர்கள் சகோதரரே என்றும், நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள் என்று ட்விட்டரில் அந்த நபரின் போஸ்டரை இணைத்து பதில் ட்விட் செய்துள்ளார்.
இது சமூக வளைதளத்தில் அதிகமாக பேசப்படுவதை கவனித்த அந்த நபர் தனது அந்த பதிவை உடனேயே நீக்கியுள்ளார். ஆனால் அவர் நீக்குவதற்கு முன்னரே நெட்டிசன்களால் அந்த பதிவு வைரலாகிவிட்டது.
மேலும் தெலுங்கானா நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.டி.ராமராவ் தெலுங்கானாவில் கொரோனாவால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு ட்விட்டர் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இதன் காரணமாக தெலுங்கானா மக்கள் கே.டி.ஆரை ட்விட்டரில் டேக் செய்து உதவிகளை கேட்டு வருகின்றனர், சமீபத்தில், ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு முன்னால் ஒரு குழந்தை உதவியற்ற முறையில் பிச்சை எடுக்கும் புகைப்படம் சமூக வளைதளம் வழியாக கே.டி.ஆர் க்கு பகிரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கே.டி.ஆர் தனது குழுவினர் மூலம் அந்த சிறுவனுக்கு உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
And why am I tagged on this brother? What did you expect me to do ???????? https://t.co/i7VrlLRtpV
— KTR (@KTRBRS) May 28, 2021