ரத்த தானம் செய்ய ரமலான் நோன்பை பாதியில் கைவிட்ட இளைஞர் !குவியும் பாராட்டு
அகமது என்பவர் ரமலான் நோன்பை பாதியில் கைவிட்டு ரத்ததானம் செய்த செயல் பாராட்டுகளை பெற்றுவருகிறது.
26 வயது நிரம்பிய பானுல்லா அகமது என்ற இளைஞர் அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்தவர்.இவர் அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார்.அகமது அதே மருத்துவமனையில் டெக்னீஷியனாக பணியாற்றும் தபாஷ் பகவதி என்பவருடன் ஒரே அறையில் வசித்து வருகிறார்.
வேறு ஒரு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு அவசரமாக ஓ பாசிட்டிவ் ரத்தம் தேவைப்படுவதாக பகவதி அறிந்துள்ளார்.
பல இடங்களில் முயற்சி செய்தும் ரத்தம் கிடைக்காத நிலையில், தன்னுடன் வசிக்கும் அகமதுவிடம் யோசனை கேட்டிருக்கிறார். ஓ பாசிட்டிவ் ரத்தப் பிரிவைச் சேர்ந்த அகமது தானே ரத்தம் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் அகமது ரமலான் நோன்பு இருப்பதால் அவரே ஏதும் சாப்பிடாமல் இருக்கும் நிலையில் ரத்தம் கொடுப்பது சரிவராது என்று பகவதி மறுப்பு தெரிவித்துவிட்டார். நோயாளிக்கு அவசரமாக ரத்தம் தேவையாக இருப்பதை உணர்ந்த அகமது , மருத்துவமனைக்குச் சென்று ஒரு யூனிட் ரத்த தானம் செய்தார்.இவரது மனிதாவிமானமுள்ள இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.நீங்களும் இவரை பாராட்ட நினைத்தால் பாராட்டுங்கள்…