பாகிஸ்தான் கொடியை பேஸ்புக்கில் பதிவிட்ட நபர் கைது.!
உத்தர பிரதேசத்தில் பாகிஸ்தான் கொடியின் புகைப்படத்தை, பேஸ்புக்கில் பதிவிட்ட 35 வயது நபர் கைது.
உத்தரபிரதேச மாநிலம் புடாவன் மாவட்டத்தில், பாகிஸ்தான் கொடியின் புகைப்படத்தை தனது பேஸ்புக்கில்(முகநூல்) கணக்கில் வெளியிட்ட 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் தான், கவனக்குறைவாக இந்த படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றியதாக போலீசாரிடம் தெரிவித்தார். தான் பதிவிட்டது தவறு என்பதை உணர்ந்தபின் அந்த படத்தை பேஸ்புக்கிலிருந்து நீக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.