உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 20 வருடத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை விஷம் வைத்து கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மகனை கடந்த ஒரு வாரமாக காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சொத்து தகராறு காரணமாக தனக்கு நெருக்கமாக உள்ள சில உறவினர்கள் அவனை கடத்தி உள்ளதாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஹபூர் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியாகிய புகார் அளித்தவரின் சகோதரர் லீலுவிடம் போலீசார் நடத்தியுள்ளனர். அப்பொழுது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சிறுவனை நான் தான் கடத்தி, விஷம் வைத்து கொன்று ஆற்றில் உடலை தூக்கி எரிந்து விட்டேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், கடந்த 2001-ஆம் ஆண்டு தனது மூத்த சகோதரரை இதே போல கொன்றதாகவும், அதன் பின் சில மாதங்களுக்கு பின்பாக அவருடைய 8 வயது மகளை விஷம் வைத்துக் கொன்றதாகவும், மூன்று வருடங்களுக்கு முன்பதாக அவருடைய மூத்த மகளை கொன்றதாகவும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பதாக மூத்த சகோதரரின் மகன் நிஷாவை கொன்றதாகவும் கூறியுள்ளார்.
தனது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் தனது சொத்தை பிரித்து கொடுக்க மனம் இல்லாததால் இவ்வாறு கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து குற்றவாளியின் வாக்குமூலத்தை ஆடியோவாக பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளியை கைது செய்ததுடன் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…