கேரள சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது!
கேரள மாநிலம் கொச்சினில் உள்ள சிறுவர்கள் இல்லத்தில் சிறுவர்களை பாலியல் தொல்லை செய்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொச்சின் அருகில் உள்ள சிறுவர்கள் இல்லத்தில் தலைமை பாதிரியார் அங்குள்ள சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 2018 முதல் இந்த செயலில் ஈடுபட்டுவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெரும்படம் என்னுமிடத்தில் இருந்த சிறுவர்கள் இல்லத்தை விட்டு சிறுவர்கள் வெளியே தப்பி வந்து தெருவில் சென்ற ஒரு நபரிடம் உதவி கேட்டு பெற்றோர்களுக்கு போன் செய்து அங்கு நடப்பதை தெரிவித்துள்ளனர்.
உடனடியாக காவல்துறை வழக்கு பதிவு செய்து பாதிரியாரை கைது செய்து 14 நாட்கள் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.