சத்திஸ்கரில் பாகிஸ்தான் கொடியை வீட்டில் ஏற்றியவர் கைது.!
சத்திஸ்கரில் பாகிஸ்தான் தேசியக்கொடியை தனது வீட்டில் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சத்திஸ்கரின் சரங்கர்-பிளைகர் மாவட்டத்தில் பழ வியாபாரியான முஸ்தாக் கான்(52) தனது வீட்டில் பாகிஸ்தான் நாட்டுக்கொடியை ஏற்றிவைத்துள்ளார். இது குறித்து அந்த நபர் மீது வந்த புகாரின் அடிப்படையில் சரியா டவுன் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
அவர் மீது இபிகோ பிரிவு 153 இன் படி வெறுப்பு மற்றும் சாதி, மத, இன பிரிவினையை உண்டாகுதல் என்ற குற்றத்தின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.