மத்தியபரதேசத்தில் மனைவியை மதம் மாற வற்புறுத்தியவர் கைது!

Default Image

மத்தியபரதேசத்தில் தனது இந்து மனைவியை மதம் மாற வற்புறுத்திய இஸ்லாம் மத கணவர் மத உரிமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

மதம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட உரிமைகளாக தான் இந்தியாவில் வளாகத்தில் உள்ளது. அதனை மீறி பிறருக்கு விருப்பமின்றி மத உணர்வுகளை திணிப்பதோ அல்லது மதம் மற்ற முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மதச்சட்டம் 1968 இந்த கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இர்ஷாத் கான் எனும் இஸ்லாம் மதத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது இந்து மதத்தினை சேர்ந்த மனைவியை மதம் மற்ற முயற்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

அதாவது அவர் படிப்பது போல அரபு மற்றும் உருது மொழிகளை மனைவி மற்றும் குடும்பத்தினரும் கற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துவதாக கூறப்பட்டுள்ளது. எனவே அவர் மீது 1968 மதச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் தான் மத்திய பிரதேச அரசு லவ் ஜிஹாதுக்கு எதிரான சிறை தண்டனை காலகட்டத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்