கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்ற நிலையில், தற்போது பல நாடுகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவில்லாமல் தவிப்பவர்களை விட சாராயம் இல்லாமல் தவிப்பவர்கள் தான் அதிகம் என சொல்ல வேண்டும்.
மது கிடைக்காததால் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டார்கள். இந்நிலையில், டெல்லியில் உள்ள பாபு சவுத்திரி எனும் பால்காரன் தனது உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்காக தனது பால் கேன்களில் மது பாட்டில்களை வைத்து சென்றுள்ளார்.
பால் அத்தியாவசியமான பொருள் போலீசார் கண்டுகொள்ளமாட்டார்கள் என நினைத்து நள்ளிரவில் இவர் கடத்தி சென்றுள்ளார். ஆனால், நள்ளிரவில் எதற்காக பால் என சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். தப்பிக்க முயன்ற அவரது பால் கேன்களை சோதனை செய்ததில் அதில் 7 மது பாட்டில்கள் இருந்துள்ளது.
போலீசார் அந்த கேன்கள் முழுவதையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் இவருக்கு எப்படி மது கிடைத்தது என விசாரணை நடைபெற்றுக்கொண்டுள்ளது.
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…