பக்தியார்பூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்த பீகார் முதல்வரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள பக்தியார்பூர் எனும் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவரை சுற்றி பாதுகாப்புக்காக காவலர்களும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நிதிஷ்குமார் மேடையில் ஏறி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக சென்றுள்ளார். மலர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி மேடையில் ஏறி சென்று முதல்வர் நிதிஷ்குமார் தோளில் குத்தியுள்ளார்.
இதை கண்டதும் உடனடியாக காவலர்கள் முதல்வரை சூழ்ந்து கொண்டதுடன், அந்த இளைஞனையும் கைது செய்துள்ளனர். விசாரணை செய்ததில் அந்த நபர் உள்ளூரை சேர்ந்த சங்கர் வர்மா என்பதும், அவர் நகை கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
பல்வேறு அரசியல்வாதிகள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசியுள்ள பீகார் மாநில அமைச்சர் அசோக் சவுத்ரி அவர்கள், முதல்வரின் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களில் ஒரு பகுதியினர் தவறு இழைத்துள்ளதாகவும், இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…