அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படங்களை வைத்து பணம் பறித்த மும்பையை சார்ந்த ராஜ் சிங் என்பவர் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். ராஜ் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பெண் நியூயார்க்கில் வசித்து வருகிறார்.ஆறு மாதங்களுக்கும் மேலாக அந்தப் பெண் ராஜ் சிங் மூலம் பிளாக்மெயில் செய்யப்பட்டது தெரியவந்து.இந்த ஆண்டு பிப்ரவரியில், ராஜ் சிங் இணையதளத்தின் மூலம் அப்பெண்ணுடன் நண்பராக அறிமுகமாகி உள்ளனர். ராஜ் சிங் தன்னை ஒரு துணை நடிகர் என கூறி பழகி வந்து உள்ளார்.
பாலிவுட் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ராஜ் சிங் அந்தப் பெண்ணின் புகைப்படங்களைக் கேட்டு உள்ளார்.பின்னர் அப்பெண் தனது தனிப்பட்ட படங்களை ராஜ் சிங்கிற்கு பகிர்ந்து கொண்டார்.அவர் புகைப்படங்களைப் அனுப்பியுடன் ராஜ் சிங் அந்தப் பெண்ணை மிரட்டி உள்ளார்.
ஆறு மாதங்களுக்கும் மேலாக ராஜ் சிங் அந்த பெண்ணை மிரட்டி மொத்தம் ரூ .7 லட்சம் பணம் பறித்து உள்ளார் .ராஜ் சிங் அந்தப் பெண்ணிடம் பணம் தரவில்லை என்றால் உனது புகைப்படங்களை குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் அனுப்புவேன் என மிரட்டி உள்ளார். பயத்தில் அந்தப் பெண் ராஜ் சிங்கின் கணக்கிற்கு பணத்தை ஆறு மாதமாக அனுப்பி உள்ளார்.
பிளாக் மெயில் செய்யப்படுவதால் சோர்ந்துபோன அந்தப் பெண் உதவிக்காக காவல்துறையிடம் சென்றார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படங்களை வைத்திருந்த மொபைல் போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…