மம்தாவை கிண்டல் செய்த பாஜக பெண் நிர்வாகி : மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Default Image

நடிகை பிரியங்கா சோப்ரா அண்மையில் ஒரு திரைப்பட விழாவில் வித்தியாசமாக தலை முடியை அலங்கரித்து வித்தியாசமான உடையில் கலந்து கொண்டார். அது ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளானது. இந்நிலையில் இந்த பிரியங்கா சோப்ரா புகைப்படத்தில் பிரியங்காவின் முகத்தை பதிலாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை மாற்றி அமைத்து ஒரு புகைப்படத்தை, மேற்குவங்கத்தை சேர்ந்த பாஜக ஹவுரா மாவட்ட பெண் நிர்வாகி பிரியங்கா ஷர்மா இணையத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது இதனை அடுத்து பிரியங்கா ஷர்மாபோலீசாரால் கைது செய்யப்பட்டார். பின் பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு அளிக்கப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த நீதிபதி,’ பிரியங்கா ஷர்மா, மம்தா பானர்ஜியுடன் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்