மம்தாவை கிண்டல் செய்த வழக்கு! மன்னிப்பு கூற தேவையில்லை உச்சநீதிமன்றம் மறுஉத்தரவு!
நடிகை பிரியங்கா சோப்ரா அண்மையில் ஒரு திரைப்பட விழாவில் வித்தியாசமாக தலை முடியை அலங்கரித்து வித்தியாசமான உடையில் கலந்து கொண்டார். அது ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளானது. இந்நிலையில் இந்த பிரியங்கா சோப்ரா புகைப்படத்தில் பிரியங்காவின் முகத்தை பதிலாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை மாற்றி அமைத்து ஒரு புகைப்படத்தை, மேற்குவங்கத்தை சேர்ந்த பாஜக ஹவுரா மாவட்ட பெண் நிர்வாகி பிரியங்கா ஷர்மா இணையத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த புகைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது இதனை அடுத்து பிரியங்கா ஷர்மாபோலீசாரால் கைது செய்யப்பட்டார். பின் பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு அளிக்கப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த நீதிபதி,’ பிரியங்கா ஷர்மா, மம்தா பானர்ஜியுடன் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், திடீரென்று பிரியங்கா ஷர்மாவின் வழக்கறிஞர் நீரஜ் கிஷான் கவுலை அழைத்த நீதிபதிகள் மம்தாவிடம் மன்னிப்பு கூற வேண்டும், என்ற நிபந்தனையில் இருந்து உங்களுக்கு விலக்கு அளிப்பதாகவும் அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யவும் உத்தரவிட்டர்கள் . ஏனென்றால், இந்த வழக்கு விசாரணையின் போது பிரியங்கா சர்மாவின் வழக்கறிஞர் கவுல், ‘மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது பேச்சுரிமைக்கு எதிரானது’ என வாதாடினார். ஆதலால் இந்த வழக்கிலிருந்து பிரியங்கா ஷர்மாவை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
DINASUVADU