இந்தியாவிலேயே காய்கனி உற்பத்தியில் முதலிடம் மேற்குவங்கம்.. அறிவித்தது மத்திய அரசு..
- கடந்த 2018-19ம் ஆண்டில் இந்தியாவிலேயே காய்கனிகள் உற்பத்தியில் மேற்கு வங்க மாநிலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
- மத்திய அரசு தோட்டகலைத்துறை விளைச்சல் பற்றிய புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2018-19ம் ஆண்டில் மேற்கு வங்க மாநிலம் மொத்தம் 29.55 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு காய்கனிகளை உற்பத்தி செய்துள்ளது முதலிடம் பிடித்துள்ளது. இதேபோல், கடந்த 2017-18ம் ஆண்டில் மேற்கு வங்கம் இரண்டாவது இடத்தில் இருந்தது இந்நிலையில் இந்த ஆண்டில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் மொத்த காய்கனிகள் உற்பத்தியில் மேற்கு வங்கம் 15.9 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்துள்ளது.இதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேச மாநிலம் இதே ஆண்டில் மொத்தம் 27.71 மில்லியன் மெட்ரிக் கடன் காய்கனிகள் உற்பத்தி செய்துள்ளது. உ.பி.க்கு அடுத்த இடத்தைப் பெற்றுள்ள மத்தியப்பிரதேசம் 9.6 சதவீதம் அளவிற்கு உற்பத்தி செய்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பீகார் 9 சதவீதமும் குஜராத் 6.8 சதவீதம் என்ற அளவிலும் உற்பத்தி செய்துள்ளன. இதுகுறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வேளாண்மை துறை ஆலோசகர் பிரதிப் குமார் மஜும்தான், இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு காரணம் விவசாயிகளின் கடும் உழைப்புதான். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை முதல்வர் மம்தா பானர்ஜியின் உத்தரவின்படி மாநில வேளாண்மை துறை எடுத்து வருகிறது. அதனால் இந்த சாதனையை எட்ட முடிந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.