மூன்று நாள் சுற்றுப்பயணமாக மும்பை செல்கிறார் மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று நாள் சுற்றுப்பயணமாக மும்பை செல்கிறார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் 3 நாள் சுற்றுப்பயணமாக மும்பை செல்ல உள்ளார். இன்று மேற்கு வங்கத்திலிருந்து மும்பை புறப்பட உள்ளார்.
இந்த மூன்று நாள் பயணத்தின்போது மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் டிசம்பர் 1-ஆம் தேதி தொழிலதிபர்களை அவர் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.