18 மாநில முதலமைச்சர்களுக்கும் ஒரே நேரத்தில் கடிதம் அனுப்பிய மம்தா பேனர்ஜி!
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்து ரயில் சேவைகள் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, 18 மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தங்கள் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, இடம், உணவு, மருத்துவ வசதியை இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏற்படுத்தி தரவேண்டும் என முதலைமைச்சர் மம்தா பேனர்ஜி கேட்டுக்கொள்ளப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் உட்பட, கேரள முதல்வர், ஆந்திர முதல்வர், தெலுங்கானா முதல்வர், கர்நாடக முதல்வர், ஒடிசா முதல்வர், மஹாராஷ்டிரா முதல்வர், ஹிமாச்சல் பிரதேஷ முதல்வர், பஞ்சாப் முதல்வர், உத்தரகாண்ட் முதல்வர், டெல்லி முதல்வர், ஜார்கண்ட் முதல்வர், ராஜஸ்தான் முதல்வர், பிஹார் முதல்வர், கோவா முதல்வர், குஜராத் முதல்வர், சட்டிஸ்கர், உத்திரபிரதேச முதல்வர் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அவர்கள் அனைவருக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டது.